வவுனியாவில் ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி இன்று ஆசிரியர்கள் கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை நிறைவின் பின்னர் பிரதான வாயிலுக்கு வந்த ஆசிரியர்கள் கையெழுத்து வைக்கும் போராட்டத்தினை மேற்கொண்டிருந்ததோடு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை வவுனியா முஸ்லிம் மகாவித்தியலயத்திற்கு முன்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் கையெழுத்து வாங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











