EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பிரதமர் மார்க் கார்னி (Prime Minister Mark Carney), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உடன் மிக நீண்ட மற்றும் ஆழமான சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல், நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பு விவகாரங்களுடன் மட்டும் சுருங்கி விடாமல், ஈரான் விவகாரம், மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்புச் சூழல், ஆர்க்டிக் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கனடாவின் இராணுவ நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கியப் பரப்புகளை உள்ளடக்கியதாக அமைந்தது.

நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மார்க் கார்னி இத்தகவலை வெளியிட்டுள்ளார். இந்த உரையாடல் மிகவும் “ஆக்கப்பூர்வமாக” அமைந்தது என்று, அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த தொலைபேசி கலந்துரையாடலில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் அமெரிக்க கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட, பல உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்புக்கு இடையே ஈரானுக்கு எதிரான இராணுவ நகர்வுகளில் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதேவேளை, நேட்டோ அமைப்பில் கனடா தற்போது தனது கடமைகளையும் பொறுப்புகளையும் மிகச் சரியாகச் செய்து வருகிறது என, அந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதுகாப்புத் துறைக்கான முதலீட்டை, நேட்டோவின் அதிகாரப்பூர்வ மறுஆய்வு ஆண்டான 2029ஆம் ஆண்டிற்குள் 4 சதவீதமாக உயர்த்தவுள்ளதாகவும் இதில் 2.5 சதவீதம் நேரடியாக இராணுவத்திற்கும், 1.5 சதவீதம் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் துருக்கியின் அன்காரா (Ankara) நகரில் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டில், பல நூறு கோடி டொலர்கள் மதிப்பிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.
அண்மைய செய்திகள்

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஆனி 27, 2026
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

2 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

3 நாட்கள் முன்னர்
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In