EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஆனி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் கனடாவின் தூதரகங்கள் இல்லாதது, அந்தந்த நாடுகளில் வாழும் கனேடிய குடிமக்களுக்கு அவசரக் காலங்களில் உதவுவதில் நாட்டிற்குப் பெரும் பின்னடைவையும் பலவீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் (Tehran) மீண்டும் கனேடியத் தூதரகத்தைத் திறக்கும் எண்ணம் தற்போதைக்குத் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிறைவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மார்க் கார்னி, “ஒரு நாட்டுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவது அல்லது அங்கு தூதரகச் சேவைகளை வழங்குவது என்பது, அந்த நாட்டின் அரசாங்கக் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பதாக அர்த்தமாகாது” எனக் குறிப்பிட்டார்.

வெனிசுலாவில் ஏற்பட்ட மிகக் கொடூரமான இரட்டை நிலநடுக்கப் பேரழிவைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அங்கு கனேடியத் தூதர்கள் களத்தில் இல்லாததால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவதில் ஒட்டாவா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஈரானில் உள்ள கனேடியர்களை மீட்பதற்கும், நமது ‘இயற்கையான நட்பு நாடுகள் அல்லாத’ (Not natural allies) வேறு நாடொன்றின் தூதரக உதவியையே, கனடா நாட வேண்டியேற்பட்டது என்றும் அவர் கவலை வெளியிட்டார். கனடா அரசு ஈரானுடன் மீண்டும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, ஒட்டாவா மற்றும் டெஹ்ரானில் உள்ள தூதரகங்களை மறுபடி திறக்கப் போவதாக ‘ஈரானிய நீதி கூட்டமைப்பு’ (Iranian Justice Collective) என்ற புலம்பெயர்ந்தோர் அமைப்பு அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.

இந்த வதந்திகளுக்குப் பதிலளித்த பிரதமர் கார்னி, “ஈரானுடன் மீண்டும் தூதரக உறவை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கத்திற்குள் எந்தவொரு ஆலோசனையும் (No discussions) நடைபெறவில்லை” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

ஆனி 27, 2026
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

6 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

4 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

6 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

3 நாட்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In