EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ் புகையிரத நிலையத்தை  அபிவிருத்தி செய்ய  திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

யாழ் புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆடி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு ‘பல்வகை போக்குவரத்து மையமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வினை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தின் ‘நெடுந்தூர பேருந்து நிலையத்தை இயங்க செய்வதில் சில சிக்கல்கள் காணப்படுவதனால், அதனை முறையாக பயன்படுத்த முடியாது உள்ளது.

எனினும், தற்போது நீதிமன்ற உத்தரவொன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அனைத்து வகையான பேருந்து சேவைகளையும் அங்கிருந்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நேர அட்டவணையை உருவாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு ‘பல்வகை போக்குவரத்து மையமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இதன் மூலம் புகையிரதம், பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாடகை வாகன சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க முடியும்.

நகர அபிவிருத்தி என்ற ரீதியில், யாழ்ப்பாண நகரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்தை ஒரு முக்கிய நகரமாக அடையாளம் கண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, யாழ் மாநகர சபை மற்றும் வட மாகாண சபை ஆகியன இதற்குத் தேவையான முதற்கட்ட உடன்பாடுகளை எங்களுக்கு வழங்கினால், அதற்கு ஏற்ப யாழ்ப்பாண பேருந்து நிலையம் மற்றும் அந்தப் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.

ஏனெனில், ஜனாதிபதி அவர்களின் வாழ்வதற்குகந்த நகரங்கள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 10 முக்கிய நகரங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா
அண்மைய செய்திகள்

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா

ஆடி 12, 2026
யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்
அண்மைய செய்திகள்

யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்

ஆடி 12, 2026
எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு –  பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
அண்மைய செய்திகள்

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

ஆடி 12, 2026
மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி
அண்மைய செய்திகள்

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

ஆடி 11, 2026
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்
அண்மைய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

ஆடி 11, 2026
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

ஆடி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு –  பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

5 மணத்தியாலங்கள் முன்னர்
இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

6 நாட்கள் முன்னர்
மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

5 நாட்கள் முன்னர்
மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In