அனைவரும் விரும்பி உண்ணும் தோசையை எப்போதும் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாமா?
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை 1 Cup
தக்காளி 2
பச்சை மிளகாய் 3
இஞ்சி சிறிதளவு
உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை
ரவையை அரை மணிநேரம் ஊறவைத்து பிறகு அதிகப்படியான நீரை வடித்து தேவையான அளவு தண்ணீரை சேர்த்து அதனுடன் தக்காளி, இஞ்சி, மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். பின் கறிவேப்பிலை, சிறிதாக வெட்டி அரைத்த கலவையுடன் சேர்த்து தோசை வடிவில் சுட வேண்டும்.
சாம்பார், சட்னியுடன் இதனை சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்.











