சிறுமி ஒருவரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த ஆபத்தான குற்றவாளியான கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் (Christopher Watts), அறையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் மற்றும் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது சட்டப்படியான இடைக்காலப் பிணை (Statutory Release) உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் தேசிய பிணை வாரியம் (Parole Board of Canada) இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1990-களின் இறுதியில் இடம்பெற்ற சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த இவர், கடந்த மே மாதம் நிபந்தனைகளுடன் கூடிய சட்டப்படியான பிணையில் விடுவிக்கப்பட்டு, மொன்றியலில் உள்ள புனர்வாழ்வு இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார்.

குறித்த புனர்வாழ்வு இல்லத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, வாட்ஸின் அறையிலிருந்து பெருந்தொகை பணம், கிரிமினல் வழக்குகள் தொடர்பான குறிப்புகள், செய்தித்தாள் துண்டுகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் புகைப்படங்கள் அடங்கிய கோப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் புகைப்படங்களில் சிலவற்றில் ‘X’ குறியீடுகள் இடப்பட்டிருந்தமை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோதனை நடத்தப்பட்ட மறுநாள் காலையிலேயே, வாட்ஸ் புனர்வாழ்வு இல்லத்திலிருந்து தப்பிச் சென்றார்.
அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே வாட்ஸ் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒன்டாரியோவின் ஹாமில்டன் பகுதியில் மதுபானக் கடை ஒன்றிற்கு அருகில் வைத்து அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.