EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மடு அன்னையின் ஆவணித் திருவிழா – 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

மடு அன்னையின் ஆவணித் திருவிழா – 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

ஆவணி 15, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் அதி வணக்கத்துக்குரிய கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்ற தோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார்,அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ,பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ. எம். கலீல் ஆகியோர் கலந்து கொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்பு களுக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

ஆவணி 15, 2026
வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!
அண்மைய செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

ஆவணி 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்

ஆவணி 15, 2026
இந்திய படையினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய துணைத்தூதுவர்
இலங்கை

இந்திய படையினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய துணைத்தூதுவர்

ஆவணி 15, 2026
நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா
அண்மைய செய்திகள்

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

ஆவணி 15, 2026
க்ளீன் ஐலண்ட்  திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்
அண்மைய செய்திகள்

க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

ஆவணி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

5 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

9 மணத்தியாலங்கள் முன்னர்
பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

3 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In