சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வேறு பகுதி மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று 12.08.2026 திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 டிப்பர்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவான இந்த நடவடிக்கையின் போது குறித்த வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களையும், வாகனங்களையும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தர்மதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதிகளையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர் .
தடயப் பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.











