EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின்  நடவடிக்கைக்கு பென்டகன்  ஆதரவு

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் நடவடிக்கைக்கு பென்டகன் ஆதரவு

புரட்டாதி 2, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் சிறுவர் சீருடைப் பயிற்சித் திட்டம் (Cadet Program) மற்றும் அதில் பங்கேற்ற பெண் சிறுமிகளின் தோற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் (Pete Hegseth) நடவடிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத், தலைமையகமான பென்டகன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரின் இந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது என்றும், அரசு உயர் பதவிகளுக்கு அழகல்ல என்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் புகைப்பட கலவை ஒன்றை அமைத்து பதிவொன்றை வெளியிட்டார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வெர்னான் பகுதியில் இயங்கும் கனடிய கேடட் பயிற்சி மையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சீருடை அணிந்த இரண்டு இளம் பெண் கேடட்கள் இடம்பெற்றிருந்தனர்.

கனடிய ஆயுதப்படைகளின் தகுதியையும், பயிற்சி பெறும் இளம் பெண்களின் உடல் தோற்றத்தையும் கேலி செய்து இழிவுபடுத்தும் வகையில் இதுதான் உண்மை என்ற குறிப்புடன் கனடியக் கொடியையும் இணைத்து ஹெக்செத் அந்தப் படத்தை பகிர்ந்திருந்தார்.

சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு தன்னார்வப் பயிற்சித் திட்டத்தைக் குறிவைத்து, அதில் பங்கேற்கும் இளம் பெண்களைப் பகிரங்கமாக இழிவுபடுத்திய இந்த நடவடிக்கை கனடாவிலும் சர்வதேச அளவிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து வாஷிங்டனில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பென்டகனின் துணைப் பத்திரிகைச் செயலாளர் ஜேக்கப் பிளிஸ் (Jacob Bliss), "எக்ஸ் தளத்தில் இடப்பட்ட அந்தப் பதிவு தனக்கான விளக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது எனக் கூறி, ஹெக்செத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

பென்டகனின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஒட்டாவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி அமெரிக்க
நிர்வாகத்திற்கு கடும் தொனியில் பதில் கொடுத்துள்ளார்.

அமெரிக்க உயர் அதிகாரிகள் மீம்களை உருவாக்குவது, பிறரை இழிவுபடுத்துவது, போலியாகக் துணிவு காட்டுவது போன்ற
சிறுபிள்ளைத்தனமான வேலைகளை நிறுத்திவிட்டு, பொறுப்பான முறையில் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வர வேண்டும் என, பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் முறிந்ததைத் தொடர்ந்து இரு
நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தகப் போரின் பின்னணியில் அமெரிக்கப் பிரதிநிதிகள் கனடாவை இலக்கு வைத்துத் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், ஹெக்செத்தின் இந்தச் சமூக ஊடகப் பதிவு இரு நாட்டுப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் ஆகஸ்டில்  42,000 வேலைகள் இழப்பு!
கனடா

கனடாவில் ஆகஸ்டில் 42,000 வேலைகள் இழப்பு!

புரட்டாதி 5, 2026
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு
அண்மைய செய்திகள்

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

புரட்டாதி 5, 2026
கனடா மீதான அமெரிக்க அதிபரின்  நடவடிக்கைகளுக்கு ஆளும் குடியரசுக்கட்சி பகிரங்க ஆதரவு
கனடா

கனடா மீதான அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆளும் குடியரசுக்கட்சி பகிரங்க ஆதரவு

புரட்டாதி 3, 2026
கனடாவில் அதிகரித்து வரும் புத்தக கொள்முதல் கோரிக்கை
கனடா

கனடாவில் அதிகரித்து வரும் புத்தக கொள்முதல் கோரிக்கை

புரட்டாதி 2, 2026
ஒன்டாரியோ ஏரி பெயர் மாற்றம் – அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ எனக் காட்டும் கூகுள் MAP
கனடா

ஒன்டாரியோ ஏரி பெயர் மாற்றம் – அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ எனக் காட்டும் கூகுள் MAP

ஆவணி 31, 2026
அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்
கனடா

அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்

ஆவணி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

4 நாட்கள் முன்னர்
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
விவசாயிகளிற்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

விவசாயிகளிற்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

3 நாட்கள் முன்னர்
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In