EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புரட்டாதி 6, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் ஏழு மாநிலங்களில் பணியாற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக முறைப்படி உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவமும் ஆற்றலும் பெற்ற நீதிபதிகள் விரைவில் பணிநிறைவு பெறுவதைத் தடுத்து, நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் சுமுகமாக நடைபெறுவதையும், மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதையும் உறுதிசெய்யும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இதற்கு அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதற்கேற்ப உரிய சட்ட விதிகளைத் திருத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் ஏற்கெனவே 60 வயதைக் கடந்த அதிகாரிகள் உடனடியாக ஓய்வு பெற மாட்டார்கள் என்றும், 2026 மார்ச் 31 அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெற்ற அதிகாரிகள் வேறு எந்தப் பணியிலும் சேரவில்லை என்றால் மீண்டும் நீதித்துறைப் பணிக்குத் திரும்ப விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத கோவா, குஜராத், கேரளா, பஞ்சாப், டெல்லி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது முடிவை இரண்டு வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து, அதுகுறித்த விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
உலகம்

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

புரட்டாதி 6, 2026
கார்க் தீவு அருகே அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்
உலகம்

கார்க் தீவு அருகே அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்

புரட்டாதி 6, 2026
நேபாள பேரழிவில்  இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு
உலகம்

நேபாள பேரழிவில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு

புரட்டாதி 6, 2026
ஸ்ரீநகரில் தரை இறங்கியபோது கம்பத்தில் மோதிய விமானம்
உலகம்

ஸ்ரீநகரில் தரை இறங்கியபோது கம்பத்தில் மோதிய விமானம்

புரட்டாதி 5, 2026
அசாம் நிலச்சரிவு: மிசோரம் ரயில் சேவை துண்டிப்பு
உலகம்

அசாம் நிலச்சரிவு: மிசோரம் ரயில் சேவை துண்டிப்பு

புரட்டாதி 5, 2026
‘ஈக்வல் எர்த்’ வரைபடம்: ஐ.நா. பொதுச்சபையில் வரலாற்றுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு
உலகம்

‘ஈக்வல் எர்த்’ வரைபடம்: ஐ.நா. பொதுச்சபையில் வரலாற்றுத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு

புரட்டாதி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

4 நாட்கள் முன்னர்
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்  – ஆளுநர் நா.வேதநாயகன்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

3 நாட்கள் முன்னர்
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In