மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான பாடசாலையில், மதிய உணவு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு நேற்று சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது போதியளவு சாப்பாடு மற்றும் கோழி இறைச்சி (சிக்கன்) வழங்கப்படவில்லை எனக் கூறி மாணவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமை ஆசிரியருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரைச் சேற்றில் கீழே தள்ளிவிட்டுத் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
மேலும், தலைமை ஆசிரியரின் அறை மற்றும் உணவு தயாரிக்கும் அறை ஆகியவற்றையும் மாணவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப் பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்டப் பாடசாலைகள் ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
இது பாடசாலையின் உள் விவகாரம் என்பதால் விசாரணை நிறைவடையும் வரை மேலதிக விபரங்களை வெளிப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.











