நடிகர் துருவ் விக்ரம் புதிய காதல் கதைக் களத்தைக் கொண்ட திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் எர்னேனி மற்றும் ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரம்மன் மற்றும் ஆதித்யா வர்மா ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கரண் அரவிந்த் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
பைசன் (Bison) திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் வேறு எந்தப் புதிய படத்திலும் இணையாமல் இருந்த நிலையில், தற்போது இந்தப் புதிய படப் அறிவிப்பு வெளியாகியுள்ளது.











