EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

புரட்டாதி 17, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தை அமுல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு பயன் அளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை இந்திய மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியாவின் கொள்கை முடிவுகள் முற்றிலும் சுயாதீனமாகவே எடுக்கப்படுவதாக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

UPI மற்றும் RuPay தளங்களின் வளர்ச்சியால் அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பின்னடைவைச் சந்தித்ததாகவும், அவற்றை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அமெரிக்க அழுத்தத்திற்கு அரசு பணிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இதற்குப் பதிலளித்துள்ள நிதி அமைச்சகம், “UPI தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டு தலையீடும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது. அவை வழக்கம்போல் இலவசமாகவே தொடரும்.

அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும்.

ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக UPI மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவர்.

இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 சதவீதத்திற்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால், சாதாரண கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் அரசுக்கோ அல்லது NPCI நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும், UPI கட்டமைப்பு, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே பயன்படும் என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
உலகம்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

புரட்டாதி 17, 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம்

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புரட்டாதி 17, 2026
உக்ரைனில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க முன்மொழிவு
உலகம்

உக்ரைனில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க முன்மொழிவு

புரட்டாதி 17, 2026
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு
உலகம்

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

புரட்டாதி 15, 2026
காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
உலகம்

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

புரட்டாதி 15, 2026
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி
உலகம்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி

புரட்டாதி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

6 நாட்கள் முன்னர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் –   இ.கதிர் தெரிவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் – இ.கதிர் தெரிவிப்பு

4 நாட்கள் முன்னர்
பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு

பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்

5 நாட்கள் முன்னர்
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In