EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

புரட்டாதி 24, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாகாண அரசின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மைச் சட்டங்கள் குறித்து பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வெவ்வேறான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

ஃபிரான்சுவா லெகோ (François Legault) தலைமையிலான ஆளும்கட்சியான கொவாலிசியன் அவனிர் கியூபெக் (CAQ) கட்சி தனது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசால் நிதியளிக்கப்படும் நிறுவனங்களின் ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்யும் பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்தது.

தற்போது நடைபெற்றுவரும் தேர்தல் பிரசாரத்தில் மதச்சார்பின்மைப் பிரச்சினை ஓரங்கட்டப்பட்டிருந்த போதிலும், அமையவுள்ள புதிய அரசு இச்சட்டம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதில் வாக்காளர்களும் உரிமையியல் அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில், தம்மால் இயற்றப்பட்ட சட்டம் 21 , சட்டம் 94 மற்றும் சட்டம் 9 ஆகிய மதச்சார்பின்மைச் சட்டங்களை முழுமையாகத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்போவதாக, தற்போதைய ஆளும் கட்சியான கொவாலிசியன் அவனிர் கியூபெக் கட்சி
உறுதியளித்துள்ளது.

அத்துடன், சட்டப் போராட்டங்களில் இருந்து இச்சட்டங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, கனடிய உரிமைகள்
சாசனத்தின் தனிவிலக்கு விதியை (Notwithstanding Clause) தொடர்ந்து பயன்படுத்தப்போவதாகவும் கொவாலிசியன் அவனிர் கியூபெக் கட்சி தெரிவித்துள்ளது.

பார்ட்டி கியூபெக்வா (PQ) மற்றும் கியூபெக் கன்சர்வேடிவ் கட்சி முதலான இரு கட்சிகளும் தற்போதைய மதச்சார்பின்மைச் சட்டங்களைத் தக்கவைத்துக்கொள்வதாகவும், நீதிமன்றச் சவால்களில் இருந்து அவற்றைப் பாதுகாக்க தனிவிலக்கு விதியை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளன.

சார்ள்ஸ் மிலியார்ட் (Charles Milliard) தலைமையிலான லிபரல் கட்சி, புதிய மதச்சார்பின்மைச் சட்டங்களைக் கொண்டுவரவோ அல்லது தற்போதைய சட்டங்களை முற்றாக ரத்து செய்யவோ மாட்டாது எனக் கூறியுள்ளது.

மதச்சார்பின்மைச் சட்டங்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள கியூபெக் சொலிடேர் கட்சி, சட்டம் 21, 94 மற்றும் 9 ஆகியவை தனிநபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், அரசின் மதச்சார்பின்மையை எந்த வகையிலும் வலுப்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் தாம் ஆட்சிக்கு வந்தால் இச்சட்டங்களை முற்றாக ரத்து செய்வதாக கியூபெக் சொலிடேர் கட்சி உறுதியளித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் எட்டு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்,
வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பாடசாலைப் பணியாளர்கள் மற்றும் அரச உதவி பெறும் முன்பள்ளி (Daycare) ஊழியர்கள், தத்தம் பணிநேரத்தில் மத அடையாளங்களை அணிவது தடை செய்யப்பட்டது.

மேலும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிரார்த்தனை அறைகள் தடை செய்யப்பட்டதுடன், அரச நிறுவனங்களில் பிரத்தியேகமாக ஹலால் அல்லது கோஷர் உணவுகளை மட்டும் வழங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இச்சட்டங்கள் மாகாணத்தின் மதச்சார்பின்மையைப் பேண அவசியம் என ஒரு தரப்பினர் வாதிடும் அதேவேளை, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாக மனித உரிமை அமைப்புகளும் மதக் குழுக்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
கியூபெக்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 26, 2026
கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்
கியூபெக்

கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்

புரட்டாதி 26, 2026
மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்
கியூபெக்

மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்

புரட்டாதி 25, 2026
மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு
கியூபெக்

மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு

புரட்டாதி 25, 2026
மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்
கியூபெக்

மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

புரட்டாதி 24, 2026
கியூபெக் மருத்துவத்துறையில் 5 மாதங்களில் 5 மருத்துவர்கள் தற்கொலை
கியூபெக்

கியூபெக் மருத்துவத்துறையில் 5 மாதங்களில் 5 மருத்துவர்கள் தற்கொலை

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

3 நாட்கள் முன்னர்
மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check