EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

புரட்டாதி 24, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செய்த சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சுயாதீன புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் மீது மொண்ட்ரியல் பொலிஸார் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மொண்ட்ரியல் நகரில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுக்கு (AI) எதிரான போராட்டத்தின் போதே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தான் ஊடகவியலாளர் என்பதை அடையாளம் காட்டிய போதிலும், பொலிஸார் தன்னை இலக்கு வைத்துத் தாக்கியதாக, பாதிக்கப்பட்ட
ஊடகவியலாளர் வில்லியம் வில்சன் (William Wilson) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 16 ஆம் திகதி மொண்ட்ரியால் நகரின் பலே டெ கொங்ரே (Palais des congrès) மையத்தில் நடைபெற்ற சர்வதேச செயற்கை
நுண்ணறிவு உச்சிமாநாட்டுக்கு எதிராக, போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் வில்சன் மீது பொலிஸார் மிளகுச் சாறு (Pepper spray) தெளித்ததுடன், நிலத்தில் தள்ளி மிதித்தும், தடியடி நடத்தியும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தான் ஊடகச் சான்றிதழை (Media accreditation) கழுத்தில் அணிந்திருந்த நிலையிலும், பொலிஸார் தன்னை அடையாளம் கண்டு வேண்டுமென்றே தாக்கியதாக வில்சன் குறிப்பிட்டுள்ளார். முன்பு அறிமுகமான பொலிஸ் அதிகாரி ஒருவர் எனது பெயரைச் சொல்லி அழைத்து, லத்தியால் அடிக்கப்போவதாகக் கூறிப் பயமுறுத்தினார் என்றும், இது தன்னைத் திட்டமிட்டு இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பதைக் காட்டுவதாகவும் வில்சன் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கான வில்சன் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளின்படி, அவருக்குக் தலையில் பலத்த அதிர்ச்சி (Concussion) ஏற்பட்டுள்ளதோடு, முகம், கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு
மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொன்றியல் பொலிஸார் முன்னெடுத்த இத்தாக்குதலால் தனக்கு வாசிப்பது, எழுதுவது மற்றும் பேசுவதில் இன்னமும் சிரமங்கள் இருப்பதாக வில்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்துப் பதிலளித்துள்ள மொண்ட்ரியால் நகரக் காவல் துறை (SPVM), சம்பவ தினத்தன்று போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து பொருட்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்தே கூட்டத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், இச்சம்பவம் தொடர்பான கோப்புகள் மறுபரிசீலனை செய்யப்படுபவதுடன், துறைசார் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு (Professional standards office) மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொண்ட்ரியலில் நடைபெறும் போராட்டங்களின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார்
நடத்தும் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இநத நடத்தையானது ஒரு தொற்றுநோய் போல பரவி வருவதாகவும் ஊடக அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
கியூபெக்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 26, 2026
கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்
கியூபெக்

கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்

புரட்டாதி 26, 2026
மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்
கியூபெக்

மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்

புரட்டாதி 25, 2026
மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு
கியூபெக்

மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு

புரட்டாதி 25, 2026
கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு
கியூபெக்

கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

புரட்டாதி 24, 2026
கியூபெக் மருத்துவத்துறையில் 5 மாதங்களில் 5 மருத்துவர்கள் தற்கொலை
கியூபெக்

கியூபெக் மருத்துவத்துறையில் 5 மாதங்களில் 5 மருத்துவர்கள் தற்கொலை

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

6 நாட்கள் முன்னர்
பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

9 மணத்தியாலங்கள் முன்னர்
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

5 நாட்கள் முன்னர்
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check