EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மீனவர்களுக்கு அனர்த்த கால நிவாரணம் வழங்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

மீனவர்களுக்கு அனர்த்த கால நிவாரணம் வழங்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

ஐப்பசி 5, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மீனவர்களுக்கும், அனர்த்த காலங்களில் உடனடி நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், புயல், கடல் கொந்தளிப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசாங்கம் மீனவர்களுக்கு அறிவுறுத்துகின்ற போதிலும், தொழிலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என கவலை வெளியிட்டார்.

அனர்த்தங்கள் தொடரும் காலங்களில் பல நாட்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் மீனவர்கள் தங்களது அன்றாட குடும்பச் செலவுகள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மன்னாருக்கு வருகை தந்தபோது மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

புயலால் வலைகள் சேதமடைந்தும், கடலில் வலைகள் தொலைந்தும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். உடைந்த படகுகளுக்கான நஷ்டஈடு குறைந்த எண்ணிக்கையிலான படகுகளுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மீனவ அதிகாரிகளுடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஸ் வழங்கப்பட்டு தொழிலுக்குச் சென்று வந்த சில மீனவர்கள், தற்போது பாஸ் இல்லாத காரணத்தால் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், அனர்த்தங்களால் தொழிலுக்குச் செல்ல முடியாத அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் திட்டத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்திலாவது அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இந்திய இழுவைப்படகுகளின் வருகையும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்
அண்மைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

ஐப்பசி 5, 2026
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஐப்பசி 5, 2026
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

ஐப்பசி 5, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

ஐப்பசி 5, 2026
திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்
அண்மைய செய்திகள்

திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

ஐப்பசி 5, 2026
மன்னாரில் பயனாளிகளுக்கான  வீடுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் பயனாளிகளுக்கான வீடுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

ஐப்பசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

4 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

7 நாட்கள் முன்னர்
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அரச வேலை வாய்ப்பு

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அரச வேலை வாய்ப்பு

1 நாள் முன்னர்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

1 நாள் முன்னர்
யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check