உலக குடியிருப்பு தினம் 2026 ஐ முன்னிட்டு மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.
‘சொந்தமாக இருக்க ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளில் மன்னார், நானாட்டான், மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் பிரதேசச் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.











