நாட்டின் சில இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி பதுளை, கண்டி, மாத்தளை , நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணித்தியால மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.











