EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருநாடுகளுக்கு அனுமதி மறுப்பு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருநாடுகளுக்கு அனுமதி மறுப்பு

கார்த்திகை 4, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உக்ரைன் மீதான போர் தொடரும் வரை கனடாவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குறிப்பாக, எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் மற்றும் ரெட்டும் நகர்களில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி (World Junior Hockey Championship) போட்டிகளில் ரஷ்ய அணி அனுமதிக்கப்படாது என்று பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உறுதிப்படுத்தினார்.

“உக்ரைனில் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற போரைத் தொடரும் ரஷ்யா மற்றும் பெலாரஸுக்கு ஆதரவாக எந்தவொரு வீரரும் கனடா மண்ணில் தங்களது நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.

மேலும், பின்லாந்து, சுவீடன், செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஹாக்கி கூட்டமைப்புகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதையும், போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பதையும் தாங்கள் மதிப்பதாகவும், இருப்பினும் கனடா தனது சொந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கன்சர்வேடிவ் ஆட்சியில் மார்க் கார்னியை இணைக்க முயன்றேன்: முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!
கனடா

கன்சர்வேடிவ் ஆட்சியில் மார்க் கார்னியை இணைக்க முயன்றேன்: முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!

கார்த்திகை 5, 2026
அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் கனடாவின் வர்த்தக மூலோபாயத்தில் மாற்றமில்லை: அமைச்சர் டொமினிக் லெப்லாங்க்!
கனடா

அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் கனடாவின் வர்த்தக மூலோபாயத்தில் மாற்றமில்லை: அமைச்சர் டொமினிக் லெப்லாங்க்!

கார்த்திகை 5, 2026
EU உறுப்பினர் அந்தஸ்தை விட உறுதியான ஒப்பந்தங்கள் அவசியம்
கனடா

EU உறுப்பினர் அந்தஸ்தை விட உறுதியான ஒப்பந்தங்கள் அவசியம்

கார்த்திகை 3, 2026
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மார்க் கார்னி
கனடா

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மார்க் கார்னி

கார்த்திகை 3, 2026
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் புதிய வரவுசெலவுத் திட்டம்
கனடா

வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் புதிய வரவுசெலவுத் திட்டம்

கார்த்திகை 3, 2026
கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்
கனடா

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்

கார்த்திகை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

5 நாட்கள் முன்னர்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்

1 நாள் முன்னர்
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை இந்திய அரசாங்கம் பெற்றுத்தரும் -பா.உ. இளையதம்பி சிறிநாத்

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை இந்திய அரசாங்கம் பெற்றுத்தரும் -பா.உ. இளையதம்பி சிறிநாத்

2 நாட்கள் முன்னர்
சீரற்ற காலநிலையால் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய  ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check