இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 3ஆம் திகதி படகோட்டி உள்ளிட்ட 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, படகோட்டிக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், 4 மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்தவும், தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏனைய 8 மீனவர்களுக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.











