முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் 15 வது கிலோமீட்டர் பகுதியில் கார் ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலிருந்து மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளை நிறைவு செய்து கொண்டு இன்று (03) அதிகாலை அங்கிருந்து மீண்டும் வீடு நோக்கி திரும்பி கொண்டு இருந்தபோது மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியின் 15 வது கிலோமீட்டர் பகுதியில் உள்ள பாலத்தில் அவர்கள் பயணித்த கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் சாரதியின் தூக்கக் கலக்கம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.











