சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்காக (MTC) 1,000 புதிய குளிர்சாதன (AC) மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மொத்த விலைக்கு ஒப்பந்த முறையில் (GCC) இந்த மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
மேலும், பேருந்து நிலையங்களில் தேவையான மின் மற்றும் இயந்திரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 500 கோடி ரூபாய் நிதியையும் முதலமைச்சர் விஜய் ஒதுக்கீடு செய்துள்ளார்.











