வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.11.2026) 32ஆவது வாரமாகப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் J/256, J/248, J/251 மற்றும் J/255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதக் காலப்பகுதியில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாததால், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், பிரதி வெள்ளிக்கிழமைகளில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க காணி உரிமையாளர்கள் தீர்மானித்திருந்தனர். அதற்கமைய, இன்றைய தினம் 32ஆவது வெள்ளிக்கிழமையாகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.











