மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சம்பள அளவுத்திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இடைக்கால கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கூடிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











