மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹுனைஸ் நகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை (27.11.2026) காலை இடம்பெற்றது.
சட்ட முதுமாணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹுனைஸ் பாரூக், அஷ்ஷைய்க் M.J.M. றிஸ்வான் (மதனி), ஹுனைஸ் நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் குதுபு சமான், ஹுனைஸ் நகர் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் A.J.M. முஸம்மில், லெப்டினன்ட் கயான் நுகேவல மற்றும் அருட்தந்தை லுமன் லோகு ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கிராம மக்களும் இணைந்து புதிய பள்ளிவாசல் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து, அஷ்ஷைய்க் M.J.M. றிஸ்வான் (மதனி) அவர்களினால் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹுனைஸ் பாரூக் விசேட உரையாற்றினார்.











