EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஊடகவியலாளர் கடத்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச!

ஊடகவியலாளர் கடத்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச!

கார்த்திகை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களான கீர்த்தி நொயர் மற்றும் போதல ஜயந்த ஆகியோர் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சம்பவங்கள் தொடர்பில் ஞாபகம் இல்லை என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான ஆள்கொணர்வு மனு விசாரணையின் மேலதிக சாட்சிப் பதிவின்போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பவங்கள் குறித்து தனக்கு நேரடியாக அறிவிக்கப்படுவதில்லை என்றும், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், 2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் தன்னைச் சந்தித்தது தொடர்பிலும் நீண்டகாலம் கடந்துவிட்டதால் ஞாபகம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். குமார் குணரத்தினம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கும் ஞாபகம் இல்லை என்றே பதிலளித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி, யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் வைத்து லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்களைக் கண்டறியக் கோரி 2012ஆம் ஆண்டு ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேலதிக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வேனை திருடி சென்ற சந்தேகநபர்கள் – தீவிர விசாரணையை முன்னெடுக்கும் பொலிஸார்!
இலங்கை

வேனை திருடி சென்ற சந்தேகநபர்கள் – தீவிர விசாரணையை முன்னெடுக்கும் பொலிஸார்!

கார்த்திகை 28, 2026
வவுனியாவில் ‘அத்தம’ தேசிய சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டம் ஆரம்பம்!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ‘அத்தம’ தேசிய சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டம் ஆரம்பம்!

கார்த்திகை 28, 2026
யாழ்ப்பாண புகையிரதத்தில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார்!
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாண புகையிரதத்தில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார்!

கார்த்திகை 28, 2026
திருநெல்வேலி மேற்கு பறவைக்குளத்தின் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

திருநெல்வேலி மேற்கு பறவைக்குளத்தின் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு

கார்த்திகை 28, 2026
வவுனியாவில் பயனாளிகளிடம் புதிய வீடுகளை கையத்த பிரதி அமைச்சர்!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பயனாளிகளிடம் புதிய வீடுகளை கையத்த பிரதி அமைச்சர்!

கார்த்திகை 28, 2026
யாழில் வீதி விபத்து தொடர்பான விசேட செயலமர்வு!
அண்மைய செய்திகள்

யாழில் வீதி விபத்து தொடர்பான விசேட செயலமர்வு!

கார்த்திகை 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு பறவைக்குளத்தின் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு

திருநெல்வேலி மேற்கு பறவைக்குளத்தின் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு

14 மணத்தியாலங்கள் முன்னர்
வலி. வடக்கில் 32ஆவது வாரமாக காணி விடுவிப்புப் போராட்டம்

வலி. வடக்கில் 32ஆவது வாரமாக காணி விடுவிப்புப் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
நவம்பர் 30ஆம் திகதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நவம்பர் 30ஆம் திகதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

7 நாட்கள் முன்னர்
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In