நடிகர் சந்தானம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லவ் பைட்’ (Love Bite) திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் (AGS Entertainment) நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தானத்துடன் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜாம்பி (Zombie) கதைக்களத்தை மையமாகக் கொண்டு திகில் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.











