பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “நிறம் “
இப்படம் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படமாகும். இந்த படம் எதிர்வரும் நவம்பர் 27-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
‘நிறம்’ படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ் மற்றும் ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சான்டோனியோ டெர்சியோவும், படத்தொகுப்பை சாபு ஜோசப்பும் மேற்கொண்டுள்ளனர். விவேகா மற்றும் பா.விஜய் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.











