EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தலைமன்னார்கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு.

தலைமன்னார்கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு.

ஆனி 15, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம்பெற இருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (15) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட குறித்த காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு குறித்த காணி அடைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணிக்குள் இன்றைய தினம்(15) சனிக்கிழமை காலை வருகை தந்த சிலர் காணியில் கனிய மணல் அகழ்வில் ஈடுபட நடவடிக்கை எடுத்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறித்த காணியில் என்ன திட்டம் முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற விடையம் தமக்கு தெரியாது என்றும் வெளிப்படையாக எமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணி பகுதிக்குச் சென்று அங்கு பொறுப்பாக இருந்தவருடன் கலந்துரையாடியதுடன், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றமையினால் இவ்விடத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மக்களுடன் பிரிதொரு தினத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த காணியில் நின்ற உரிய நபர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினர்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

3 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

4 நாட்கள் முன்னர்
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

6 நாட்கள் முன்னர்
வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை

வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை

4 நாட்கள் முன்னர்
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

19 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In