EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மண்டைதீவு கிணறுகளை தோண்டுங்கள் – ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

மண்டைதீவு கிணறுகளை தோண்டுங்கள் – ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

புரட்டாதி 4, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

அதன் போது, வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன், திருனாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரும் முறைப்பாட்டாளர்களுக்கு ஆதரவாக பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்

அதன் போது, முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்,

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து
அண்மைய செய்திகள்

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

ஆனி 25, 2026
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி
Uncategorized

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

ஆனி 25, 2026
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

2 நாட்கள் முன்னர்
யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

5 நாட்கள் முன்னர்
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

1 மணத்தியாலம் முன்னர்
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

5 நாட்கள் முன்னர்
மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In