2025ம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை டென்னிசில் இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம்(23) நடந்த இறுதி ஆட்டத்தில் இத்தாலி – ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதின.
இதில் முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களில் இத்தாலியின் பெரேட்டினி, பிளவியோ கோபோலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இத்தாலி 2-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திதொடர்ந்து 3-வது முறையாகவும் சாம்பியன் பட்டத்தினை சுவீகரித்தனர்.





