T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
T20 உலக கோப்பை அவுஸ்திரேலிய அணியை அறிவித்த தேர்வுக்குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி, காயமடைந்த வீரர்கள் குணமடைந்து வருவதாகவும், உலகக் கிண்ண தொடருக்கான சரியான நேரத்தில் அவர்கள் உடல் தகுதி பெறுவார்கள் என்றும் கூறினார்.
இந்தப் போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து, அவருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளதால், தற்காலிக அணியே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி;
மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ் வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.










