நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு அண்மையில் உள்ள சந்தியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்தொன்று சம்பவித்துள்ளது.
நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நுவரெலியா நகர் நோக்கி பயணித்த வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் ஒரு பெண்ணும், இரண்டு பாடசாலை மாணவர்களும் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்களை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











