EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு

ஆனி 15, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் எதிர்க்கட்சியான கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா (Parti Québécois – PQ) ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையே கடுமையான முரண்பாடு வெடித்துள்ளது.

கியூபெக் லிபரல் கட்சியின் தேர்தல் நிதித் திரட்டலைத் ‘திட்டமிட்ட குற்றக் கும்பலின்‘ (Organized Crime) செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பேசிய பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டனுக்கு (Paul St-Pierre Plamondon) எதிராக, லிபரல் கட்சி அதிகாரப்பூர்வமாக ”வழக்கிற்கு முந்தைய சட்ட அறிவித்தலை” அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் மாகாணப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள பரபரப்பான அரசியல் சூழலில், இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் எத்தகைய கடுமையான விமர்சனங்களையும் சகித்துக் கொள்ள தாம் தயாராகவே இருப்பதாகவும், ஆனால், தனது கட்சியின் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய வேட்பாளர்களின் நற்பெயரைச் சிதைக்க முயன்றால் தாம் ஒருபோதும் சமரசம்   செய்துகொள்ளப் போவதில்லை எனவும் லிபரல் கட்சித் தலைவர் சாள்ஸ் மில்லியார்ட் தெரிவித்துள்ளார்.

வெறும் அரசியல் ஆதாயத்திற்காகப் பொதுமக்களைத் திசைதிருப்பவும், சந்தேக விதைகளை விதைக்கவும் இத்தகைய காட்டு மிராண்டித்தனமான  குற்றச்சாட்டுகளை, பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளதாக, லிபரல் கட்சித் தலைவர் சாள்ஸ் மில்லியார்ட் விமர்சித்துள்ளார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் தாம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றும், தமது கருத்துக்களை மீளப்   பெறப்போவதில்லை என்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‘நோஷ்’ என்ற வார்த்தைக்கு தடை விதித்த கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு
கியூபெக்

‘நோஷ்’ என்ற வார்த்தைக்கு தடை விதித்த கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு

ஆனி 15, 2026
மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ்  அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
கியூபெக்

மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ் அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஆனி 15, 2026
மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான  விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 15, 2026
உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’
கியூபெக்

உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’

ஆனி 12, 2026
ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்
கியூபெக்

ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்

ஆனி 12, 2026
19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்
கியூபெக்

19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

5 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

3 நாட்கள் முன்னர்
வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

3 நாட்கள் முன்னர்
தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

3 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In