EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

ஆனி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன் கருத்து தெரிவிக்கும் போதே கடற்தொழில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக நோக்கினால், மீள் குடியேறிய மக்களுக்காக 827 வீடுகளும், வறுமை நிலையில் உள்ள ஏனைய மக்களுக்காக 281 வீடுகளும், சமூர்த்தி பயனாளிகளுக்காக 45 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 379 வீடுகளுக்கான திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 இலட்சம் ரூபாய்க்கு ஒரு வீடும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விவசாய திட்டங்களுக்காக 06 திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

சுற்றுலா அபிவிருத்திக்காக 04 பாரிய திட்டங்களும், விளையாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்காக 05 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று போக்குவரத்து அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கிராமிய வீதி புனரமைப்புக்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கலாக ரூபா 2500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக நெடுந்தீவிற்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை படகுகள் திருத்தம் செய்யப்பட்டு அவை கடல் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ளது.

அதேபோன்று சமூக சக்தியினால் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதவும், அதில் 719 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு ரூபா 652 மில்லியனில் நடைமமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய உற்பத்தி திறன் செயற்பாடுகளுக்காக 17 திட்டங்களும், அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட உட்கட்டுமானங்களை மீட்டெடுப்பதற்காக 03 திட்டங்களுக்க்காக ரூபா 32 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிற்கு அப்பால் உலக வங்கி மற்றும் சர்வதேச வங்கிகளிடமிருந்து மேலும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுக்கு 125 மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதை பொருள் பாவணையானது கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது, அண்மையில் இலஞ்ச ஊழல் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

ஆனி 21, 2026
வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை
அண்மைய செய்திகள்

வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை

ஆனி 20, 2026
மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

ஆனி 20, 2026
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.
அண்மைய செய்திகள்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

ஆனி 20, 2026
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆனி 20, 2026
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

ஆனி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி விவசாயிகளால்  முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு பேரணி

கிளிநொச்சி விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

4 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

1 நாள் முன்னர்
ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

6 நாட்கள் முன்னர்
80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In