கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வவுனியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த உலக சாதனையை நிலைநாட்டினார்.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. 2 மணி 30 நிமிடம் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி குறித்த சிறுமி உலக சாதனையை நிகழ்த்தினார்.
குறித்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரன் அவர்களால் “உலக நாட்டிய இளவரசி” என்று மகுடம் சிறுமிக்கு சூட்டி வைக்கபட்டது.










