EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 பேர் படுகொலை வழக்கு: இனியபாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 பேர் படுகொலை வழக்கு: இனியபாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஆடி 2, 2026
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரை எதிர்வரும் 8ம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டார்.

கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 28ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து  திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பயணித்தபோது அவர் விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக  அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதிகோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விசாரணை கடந்தகால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, இந்த படுகொலை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவி கடந்த 2025ம் ஆண்டு சிஜடியினரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்கள்  விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் கடந்த 2025  ஜூலை 6ம் திகதி திருக்கோவிலில் வைத்தும் அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும்  கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை சிஜடியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், 2005 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் அம்பாறை திருக்கோவிலை மையமாக வைத்து  திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்புட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஒரு வருட காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வைத்திருந்த இவரை சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (02) முன் நகர்வு பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை நீதவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, இவரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து விடுவித்துள்ளதாக சிஜடியினர் நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து நீதவான் இவரை எதிர்வரும் 8ம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

ஆடி 3, 2026
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்

ஆடி 3, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆடி 3, 2026
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆடி 3, 2026
ரகித ராஜபக்ஷவுக்கு  மீண்டும் விளக்கமறியல் உத்தரவு
அண்மைய செய்திகள்

ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

ஆடி 3, 2026
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

ஆடி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!

கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!

2 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

5 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு

வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு

3 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In