கனடா பிரதமர் மார்க் கார்னி, நேட்டோ அமைப்பின் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை துருக்கியின் அங்காரா நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு, கனடா பிரதமர் ஒருவர் துருக்கி செல்லும் முதல் அதிகாரப்பூர்வ விஜயம் இதுவாகும்.
ஜூலை 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த நேட்டோ மாநாடு வழக்கத்தை விட குறுகிய அளவில் நடைபெறவுள்ளது. கூட்டணியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிப்பு குறித்து முக்கிய ஆலோசனைகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டில் கனடாவின் பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்கும் திட்டங்கள் குறித்து பிரதமர் கார்னி விளக்கமளிக்கவுள்ளார்.
அங்காரா பயணத்திற்குப் பின்னர் அவர் சவூதி அரேபியாவுக்கும் சென்று வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.
இதனிடையே, எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் கனடா–துருக்கி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது











