EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

ஆடி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று சனிக்கிழமை(11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சனைகள், அதேபோன்று அண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடந்து எமது இறங்குதுறை வரைக்கும், அதாவது மீனவர்கள் மீன் பிடிக்கும் இடம் வரைக்கும் வந்த விடயங்களை நான் இந்த ஊடக வாயிலாக உரிய தரப்புக்கு தெரிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

குறிப்பாக, இந்த சட்டவிரோத மீன்பிடி முறைகள். இது தொடர்பாக பல விடயங்கள் மன்னார் மாவட்டத்திலும் வடக்கிலே காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்திலே தொடர்ச்சியாக இது காணப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாக காலப்பகுதிகளிலே இந்தத் தொழில் முறைகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் குறிப்பிட்ட தூரம் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கக் கூடிய அனுமதி யை கடற்படையும் வழங்கியிருந்தது.

இருந்தபோதிலும், அந்தப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து கடல் உணவுகளையும் அறுவடை செய்து, அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அன்றைய காலப்பகுதியிலே அவர்கள் செய்து வந்தார்கள்.

2009-க்கு பின்னர் யுத்தம் நிறைவு க்குப் பின்னர் படிப்படியாக அரசாங்கம் வேண்டிய தூரம் சென்று கடலில் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று அந்த சூனியப் பிரதேசங்களை அகற்றிய பிறகு, இந்தத் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் எல்லை தாண்டியதாக இருக்கிறது.

டைனமட், சுருக்குவலை, இழுவைப்படகுகள் அதேபோன்று தங்கூசி கொண்டு தொழில் பிடிக்கும் முறைகள், அவ்வாறான 14 வகையான தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும் இப்போது இந்த வடக்குக் கடல் கடற்பரப்பிலும் அதே போன்று மன்னார் மாவட்டத்திலும் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது.

இதை நாங்கள் தடுப்பதற்கும் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மன்னார் மாவட்டத்தில் எங்களுக்குள்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மீன்பிடி கிராமங்கள், தோறும் இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்களை தங்களது வாழ்வாதாரம் என்று கூறிக்கொண்டு செய்து வருகிறார்கள்.

நாங்கள் கிராமங்களைக் குறிப்பிடப்பட்டாலும், குறிப்பிடா விட்டாலும் உண்மையிலேயே யார் யார் என்ன தொழில் செய்கிறார் என்று அந்தந்த கிராமங்களுக்கு தெரியும். எனவே, இதில் நான் குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது இந்த விடயத்தில் ஒருவரைக் குறிப்பிடவோ நான் இந்த ஊடக சந்திப்பை செய்யவில்லை.

இந்தத் தொழில்கள்… நாங்கள் தலைவர்கள் பல்வேறுபட்ட கூட்டங்களிலே பங்கு பெற்றுகின்றோம், பல மாகாண கூட்டங்களிலும் நாங்கள் பங்கு பெற்றிருக்கிறோம்.

ஆனால் குறிப்பாக, மன்னார் மாவட்டம் தொடர்ந்து பேசும்போது எங்களுக்கு சில விடயங்களை அங்கு பேசும்போது நாங்கள் தடுப்பதா அல்லது மௌனமாக இருப்பதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களாக இருக்கட்டும் அல்லது பல அரசியல் தரப்புகளைச் சந்தித்து நாங்கள் மனுக்குடுத்த விடயங்கள் போன்ற பல விடயங்கள், பேசிய விடயங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன.

ஆனால் அவை அனைத்துமே பலனற்று, இன்று வரை நாங்கள் 2009-ல் எப்போது கலைக்கத் துவங்கினோமோ இந்த விடயத்தை, அப்போதிலிருந்து இன்று வரைக்கும் அந்த விஷயத்தைத் தான் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, ஒரு விடயமும் தீர்ந்ததாக இல்லை. பல அரசுகள் வந்து போய்விட்டன.

தற்போது கூட புதிய கடற்றொழில் அமைச்சர் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றார். அவரை நாங்கள் பல தடவை சந்தித்து விட்டோம்.

தொடர்புடைய செய்திகள்

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி
அண்மைய செய்திகள்

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

ஆடி 11, 2026
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

ஆடி 11, 2026
யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி
அண்மைய செய்திகள்

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

ஆடி 11, 2026
கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!
அண்மைய செய்திகள்

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!

ஆடி 11, 2026
சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஆடி 11, 2026
கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

ஆடி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

3 நாட்கள் முன்னர்
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

3 மணத்தியாலங்கள் முன்னர்
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

4 நாட்கள் முன்னர்
‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

5 நாட்கள் முன்னர்
கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

20 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In