EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

ஆடி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதையை விடுவிக்கவும், தினமும் காலை முதல் இரவு 10 மணி வரையில் ஆலயத்திற்கு சென்று வழிபட இராணுவ தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து, கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு, மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபடவும் , ஆலயத்திற்கு செல்லும் வீதியின் நடுவே இராணுவத்தினரின் வாகன திருத்தகம் (கராஜ்) காணப்படுவதனாலேயே ஆலயத்திற்கு செல்ல தற்காலிக வீதி அமைக்கப்பட்டதாகவும் , அதனால் , இராணுவத்தினரின் வாகன திருத்தகத்தை அப்புறப்படுத்தி ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரி வந்தனர்.

இந்நிலையில் , கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சரிடமும் வீதி விடுவிப்பு தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் , தற்போது இராணுவத்தினர் வீதியை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே , நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர வீதியினை விடுவிப்பதாகவும், ஆலயத்திற்கு காலை முதல் இரவு 10 மணி வரையில் பக்தர்கள் சென்று வழிபாடு நடாத்த அனுமதிப்பதாகவும் இராணுவ தளபதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்
அண்மைய செய்திகள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

ஆடி 8, 2026
வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்
அண்மைய செய்திகள்

வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்

ஆடி 8, 2026
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

ஆடி 8, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள்

ஆடி 8, 2026
யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

2 நாட்கள் முன்னர்
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

2 நாட்கள் முன்னர்
ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி துருக்கி பயணம்

3 நாட்கள் முன்னர்
வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

5 நாட்கள் முன்னர்
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In