EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்

மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்

ஆவணி 10, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள் வழங்கப்பட்டன.

குறித்த வலைகள் வழங்கும் நிகழ்வு, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலகத்தில், யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வான்பாயும் காலப்பகுதிகளில், நீருடன் சேர்ந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்வதால் மீன்வள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

இதனைத் தடுக்கும் நோக்கில், குளங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்லும் இடங்களில் பொருத்துவதற்காக இந்த தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குளங்களில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களுக்கு மொத்தமாக 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தடுப்பு வலைத் தொகுதியினதும் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அமைச்சின் இணைப்பாளர் வல்லிபுரம் அற்புதராசா, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தடுப்பு வலைகள் வழங்கப்படுவதன் மூலம், நீர்ப்பாசனக் குளங்களில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகளைப் பாதுகாப்பதுடன், மீனவர் சங்கங்களின் வாழ்வாதாரத்தையும் மீன்வள உற்பத்தியையும் மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்களுக்கு சேதம் – விவசாயிகள் குற்றச்சாட்டு
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்களுக்கு சேதம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆவணி 13, 2026
மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 12, 2026
செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு

ஆவணி 12, 2026
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்
அண்மைய செய்திகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

ஆவணி 12, 2026
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

ஆவணி 12, 2026
டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!
அண்மைய செய்திகள்

டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!

ஆவணி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

பொலன்னறுவையில்  தனியார் அதிசொகுசு பேருந்துடன்  மோட்டார் சைக்கிள்  மோதி விபத்து

பொலன்னறுவையில் தனியார் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

2 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

6 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

1 நாள் முன்னர்
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In