மித்தெனிய உழ்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே இந்த துப்பாக்கி சூட்டை மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











