EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை

காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை

ஆவணி 15, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ சம்பவங்களால், கனடாவில் தயாரிக்கப்படும் Canadair நீர்குண்டு விமானங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.

கல்கரி நகரை தளமாகக் கொண்டு இயங்கும் De Havilland Canada நிறுவனம், புதிய DHC-515 Canadair நீர்குண்டு விமானத்தை உருவாக்கி வருகிறது. ஏரி, ஆறு அல்லது கடலில் இருந்து மிகக் குறுகிய நேரத்தில் நீரை எடுத்துக் கொண்டு, காட்டுத்தீ பரவும் பகுதிகளில் துல்லியமாகக் கொட்டும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுத்தீ அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், குரோஷியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய DHC – 515 விமானங்களுக்கு ஏற்கனவே ஆர்டர்களை வழங்கியுள்ளன. முதல் விமானம் 2027 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டு, 2028 ஆம் ஆண்டு கிரீஸ் அரசிடம் முதல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் காட்டுத்தீ பரவும் காலம் நீண்டு வருவதுடன், ஒரே நேரத்தில் பல பிராந்தியங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதால், தீயணைப்பு விமானங்களை நாடுகளுக்கிடையே பகிர்ந்து பயன்படுத்துவது சிரமமாகி வருவதாகவும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய நீர்குண்டு விமானங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் கனேடிய விமானத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் இந்த வகையான நூற்றுக்கணக்கான விமானங்களுக்கு தேவை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் காட்டுத்தீ அச்சுறுத்தல் Canadair நீர்குண்டு விமானங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உலகளவில் உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு
கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆவணி 18, 2026
120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்
கனடா

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

ஆவணி 18, 2026
கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடா

கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 17, 2026
கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு
கனடா

கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு

ஆவணி 16, 2026
ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!
கனடா

ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!

ஆவணி 16, 2026
ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு
கனடா

ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

2 நாட்கள் முன்னர்
யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

3 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

தலைமன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

2 நாட்கள் முன்னர்
பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In