EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆவணி 18, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தனது அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை (Security Screening) முறைகளை முழுமையாக மீளாய்வு செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கனடியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தையடுத்தே, மத்திய அரசு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பெல்ஜியத்தின் மொன்ஸ் (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோ அமைப்பின் ஐரோப்பியக் கூட்டுப் படைகளின் உயர் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த பிய்வே ஜாங் (Biwei Zhang) என்ற சீன வம்சாவளி கனடியப் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

நேட்டோ தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் பணியாற்றிய ஜாங், தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கோப்புகளை அணுக முயன்றதாகவும், தனக்கு அனுமதி இல்லாத பகுதிகளுக்குச் சென்றதாகவும் நேட்டோ பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னரே பெல்ஜிய அதிகாரிகள் aந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

உளவு பார்த்தமை மற்றும் குற்றவியல் அமைப்பொன்றில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜியப் பொலிஸாரால் இவர் மீது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), நேட்டோ போன்ற சர்வதேச அமைப்புகளில் கனடியர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசீலனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது குறித்து, மத்திய அரசாங்கம் தீவிர விசாரணை நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

கனடியப் பாதுகாப்பு புலனாய்வுச் சேவையின் (CSIS) பாதுகாப்பு மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சர்வதேச அமைப்புகளில் பணியாற்றும்  கனடியர்களுக்குப் பாதுகாப்பு அனுமதி (Security Clearance) வழங்குவது அல்லது ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவை மத்திய வெளியுறவு அமைச்சு மேற்கொள்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்
கனடா

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

ஆவணி 18, 2026
கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடா

கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 17, 2026
கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு
கனடா

கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு

ஆவணி 16, 2026
ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!
கனடா

ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!

ஆவணி 16, 2026
காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை
கனடா

காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை

ஆவணி 15, 2026
ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு
கனடா

ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

3 நாட்கள் முன்னர்
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

1 நாள் முன்னர்
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

4 நாட்கள் முன்னர்
குறிகட்டுவான் படகு விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குறிகட்டுவான் படகு விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

1 நாள் முன்னர்
வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In