EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

ஆவணி 20, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

94 வயதான அவருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி, 1950-ஆம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘ஷவுகாரு’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தே ‘சௌகார்’ எனும் அடைமொழி அவரது பெயருடன் இணைந்தது.

தமிழில் 1952-ல் வெளியான ‘வளையாபதி’ படம் மூலம் அறிமுகமான அவர், ‘பாசமலர்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘இரு கோடுகள்’ உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சினிமா மட்டுமின்றி 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றுள்ள இவருக்கு, கலைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் வகையில் மத்திய அரசின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது மற்றும் ஆந்திர அரசின் ‘நந்தி’ விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அறிந்து, திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

“ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடிவதில்லை”: நடிகை ராதிகா சரத்குமார்
சினிமா

“ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடிவதில்லை”: நடிகை ராதிகா சரத்குமார்

ஆவணி 20, 2026
10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தர்மதுரை’: நன்றி தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி
சினிமா

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தர்மதுரை’: நன்றி தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி

ஆவணி 20, 2026
சாய் அபயங்கரின் இசையில் ரதிமா பாடல்
சினிமா

சாய் அபயங்கரின் இசையில் ரதிமா பாடல்

ஆவணி 19, 2026
ஜெயிலர் 2 வின் முதலாவது  சிங்ள் விரைவில்..
சினிமா

ஜெயிலர் 2 வின் முதலாவது சிங்ள் விரைவில்..

ஆவணி 18, 2026
திரைக்கு வரும் இருமுடி திரைப்படம்
சினிமா

திரைக்கு வரும் இருமுடி திரைப்படம்

ஆவணி 18, 2026
முதல்முறையாக சின்னத்திரையில் நடுவராகக் களம் இறங்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சினிமா

முதல்முறையாக சின்னத்திரையில் நடுவராகக் களம் இறங்கும் ஏ.ஆர்.ரகுமான்!

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

4 நாட்கள் முன்னர்
செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்

4 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

தலைமன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

3 நாட்கள் முன்னர்
யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In