EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

ஆவணி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட்சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி கைகளை பின்பக்கமாக கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு மூவரும் சேர்ந்து கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்றயதினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பவற்றை மீட்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க, பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

டெங்கு நோயின் தீவிரம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு
அண்மைய செய்திகள்

டெங்கு நோயின் தீவிரம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

ஆவணி 16, 2026
அயகம, இந்தொலவத்தையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
இலங்கை

அயகம, இந்தொலவத்தையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

ஆவணி 16, 2026
குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு
அண்மைய செய்திகள்

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

ஆவணி 16, 2026
அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் – இரா.பிரபாகரன்
இலங்கை

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் – இரா.பிரபாகரன்

ஆவணி 16, 2026
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை கையளிப்பு
இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை கையளிப்பு

ஆவணி 16, 2026
செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்
அண்மைய செய்திகள்

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்

ஆவணி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

2 நாட்கள் முன்னர்
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

2 நாட்கள் முன்னர்
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

5 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

1 நாள் முன்னர்
மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In