கோஸ்லாந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து அலுத்துவல பொலிஸ் பாயிண்ட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடமைக்காகச் சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது லொறியின் சக்கரம் பொலிஸ் உத்தியோகத்தர் மீது ஏறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சீனத்தன்னா, ஒன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய புஷ்பகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோஸ்லாந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











