சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இதுக்கும் திரைப்படம் ஜெயிலர் 2.
இந்த படத்தின் முதல் கதாபாத்திர அறிமுகமாக, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு “திலீப்”என்ற மர்மமான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள சுமார் 30 விநாடிகள் கொண்ட க்ளிம்ப்ஸில், சுராஜ் தனது கூட்டத்தினருடன் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரம் முத்துவேல் பாண்டியனுக்கு எதிரான மோதலில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை இந்த க்ளிம்ப்ஸ் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, காரில் இருந்து இறங்கி சுருட்டுடன் தோன்றும் சுராஜின் புதிய தோற்றமும், அவரது கதாபாத்திரத்தின் பின்னணி குறித்த மர்மமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் மீண்டும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பதுடன், சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.











