வடகொரிய போர்க் கைதிகளை (POW) தென் கொரியாவுக்கு மாற்றுவது தொடர்பான தகவல்களை உக்ரைன் ஒருதரப்பாக பகிரங்கப்படுத்தியமைக்காக, அந்நாட்டிடம் இருந்து உத்தியோகபூர்வ விளக்கத்தையும் மன்னிப்பையும் தென் கொரிய அதிபர் அலுவலகம் கோரியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே ரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும், உக்ரைன் அதனை மீறி தகவல்களை வெளியிட்டுள்ளதாக தென் கொரியா இன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அத்தகைய ரகசிய உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என உக்ரைன் பின்னர் மறுப்பு தெரிவித்திருந்தது.
உக்ரைனின் இந்த மறுப்பு பொய்யானது எனவும், இது இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாகவும் தென் கொரிய அதிபர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.











