தனது மகனையும் கொலை செய்து விட்டு மனைவியையும் கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் இரத்மலானை- மாளிகாவ பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு, தனது மனைவியையும் அந்த நபர் கொடூரமாகத் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கல்கிசை போலீசார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதுடன்,மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.தப்பியோடிய சந்தேக நபரை தேடி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











